பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி - நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் தொடங்கி வைத்தார்!!….
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2 கோடியே 22 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3,000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பை9 வழங்கும் நிகழ்ச்சியை இன்று தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நெமிலி ஒன்றியத்தில், ஒன்றிய பெருந்தலைவர் வடிவேலு அவர்கள் கீழாந்துரை, சிறுணமல்லி, சம்பத்ராயன்பேட்டை, புதுகண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அப்போது சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு, கீழா்ந்துறை ஊராட்சி மன்ற தலைவர் மின்னல்ஒளி அம்பேத்ராஜ், கலைஞர்தாசன், சிறுணமல்லி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி அருணாச்சலம், தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.






கருத்துகள் இல்லை