• சற்று முன்

    ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் பொங்கல் விழாவையொட்டி நடந்த கபடி போட்டியை குடியாத்தம் எம்எல்ஏ வி.அமலுவிஜயன் துவக்கி வைத்தார்.

     


    ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் பேரணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழாவையொட்டி நடந்த கபடி போட்டியை குடியாத்தம் எம்எல்ஏ வி.அமலுவிஜயன் துவக்கி வைத்தார்.


    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி செவ்வாய்க்கிழமை இரவு பேரணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பொங்கல் கபடி போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எம் டி சீனிவாசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் எம்எல்ஏ வி. அமலுவிஜயன் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.  ஒன்றிய அவை தலை வர் சிவக்குமார், ஒன்றிய துணை செயலாளர்சேகர், மாவட்ட பிரதிநிதி பொன் ராஜன் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாதனூர் ஒன்றிய குழு துணை தலைவர் சாந்தி சீனிவாசன், அனைவரையும் வரவேற்கிறார் இந்த விழாவில் ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பல்வேறு அணிகள் கலந்து கொண்டன.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜி. ரமேஷ், திமுகவின் தயாநிதி வெங்கடேசன் குபேந்திரன், குரு வாசன் கவுன்சிலர்கள் வார்டு உறுப்பினர்கள் திமுக கழக நிர்வாகிகள்   உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad