• சற்று முன்

    இ. ஓ. க. மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் பொங்கல் விழா


    சென்னை சூளை இந்து ஒற்றுமை கழக மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் பொங்கல் விழா அப்பள்ளியின் ஆட்சி மன்ற குழு செயலாளர் சந்திரசேகர் தலைமையில் நாகேஸ்வரராவ், சக்ரவத்தி, ரவி, முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 


    இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜவஹர் (காவல் துறை கண்காணிப்பாளர் அவர்கள் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தார். நிகழ்ச்சியின் துவக்கமாக பள்ளியின் ஸ்தாபகர் சிங்காரவேலு அவர்களின் திருவுருவ சிலையிக்கு சிறப்பு விருந்தினர் ஜவஹர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார். 


    பின்னர் பள்ளி தேசிய படை மாணவர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையுடன் விழா இனிதே துவங்கியது. முதலில் நாட்டுப்பண் மங்கள இசையுடன், பள்ளியின் தலைமையாசிரியர் முரளிதரன் வரவேற்புரை நிகழ்த்தினார். 


    சிறப்புவிருந்தினர் ஜவஹர் அவர்கள் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை குறித்து சிறப்புரையாற்றினார். 

    இவ்விழாவில் பள்ளியாசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பள்ளியின் ஆட்சி மன்ற குழு இயக்குநர்கள் ரமேஷ் பாபு, சீனிவாசன் , பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழினியன் மற்றும்  மாணவர்கள், பெற்றோர்கள்என திரளானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் 


    இறுதியில் விக்டோரியா பவுல் ராணி அவர்கள் நன்றியுரையாற்றினார் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad