• சற்று முன்

    செய்யாறில் வேலுநாச்சியாரின் பிறந்த நாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்ததவெ.க.,வினர்!


    வேலு நாச்சியாரின்' பிறந்தநாளையொட்டி  செய்யாறில் த.வெ.க.,வின் கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில், பொறுப்பாளர்கள் வேலு நாச்சியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

    சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேலு நாச்சியார். இவர் 18ம் நூற்றாண்டில் பிறந்தவர். விடுதலைப் போராட்ட தியாகியும், கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி ஆவார். இவரது பிறந்தநாள் விழா நேற்று செய்யாறில் த.வெ.க., சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. செய்யாறு தெற்கு நகர செயலாளர் சந்தோஷ் குமார் ஏற்பாட்டில், வேலு நாச்சியாரின் திருவுருவப் படத்திற்கு திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவரைத் தொடர்ந்து செய்யாறு மத்திய ஒன்றிய செயலாளர் புவனேஸ்வரி மற்றும் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வேலுநாச்சியார் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad