கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு புடவைகள் மற்றும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கிய சமூக சேவகர்!
இவ்விழாவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திமுக 5-வது வட்டச் செயலாளர் விநாயகம், திமுக முன்னாள் துணைத் தலைவர் தாமஸ் மற்றும் நட்ராஜ், போக்குவரத்து துறை பாபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னிலையில் பொதுமக்களுக்கு புடவைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுகள், பேனா ,பென்சில் உள்ளிட்ட எழுது உபகரணங்களை வழங்கினர். சமூக சேவகரான முனுசாமி கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு புடவைகள் வழங்கியும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுகோல் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அதிகாலை வேளையில் காகங்கள், நாய்கள், புறாக்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கும் தினமும் உணவு வழங்கி அழகு பார்த்து வருகிறார் இந்த சமூக சேவகர் முனுசாமி என்று சொன்னால் அது மிகையாகாது. சமூக சேவகர் முனுசாமி வழங்கிய புடவைகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை பெற்றுக்கொண்டு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை சமூக சேவகர் முனுசாமிக்கு தெரிவித்துவிட்டு சென்றது பார்ப்போர் மனதை நெகிழ வைத்தது குறிப்பிடத்தக்கது.






கருத்துகள் இல்லை