தோல் தொழிற்சாலைக்கு பணிக்கு சென்ற நபர் மர்மமான முறையில் உயிரிழப்புஉறவினர்கள் சந்தேகித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தோல் தொழிற்சாலைக்கு பணிக்கு சென்ற நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு விஷவாயு தாக்கி உயிரிழந்தாரா என உறவினர்கள் சந்தேகித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் கத்திவாடி கூட்ரோடு பகுதியை சேர்ந்த ராஜா(54)என்பவர் அப்பகுதியில் உள்ள அப்துல்லா தம்வீல் என்ற தோல் தொழிற்சாலையில் வேலைக்காக அழைத்ததன் காரணமாக இன்று காலை பணிக்காக சென்றுள்ளார் பணிக்குச் சென்ற சில மணி நேரத்திலேயே ராஜா மரணம் அடைந்ததாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்து உயிரிழந்த ராஜாவின் உடலை தொழிற்சாலை வளாகத்தின் வெளியே கொண்டு வந்து வைத்துவிட்டு எவ்வித தகவலையும் உறவினர்களுக்கு தெரிவிக்காமல் தொழிற்சாலையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்
இந்த நிலையில் உயிரிழந்துள்ள ராஜாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்து தொழிற்சாலையின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
காலையில் பணிக்கு சென்ற ராஜா மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிலையில் விசவாய்வு தாக்கி தொழிற்சாலையில் உயிரிழந்தாரா என்பது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்






கருத்துகள் இல்லை