தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு 2025 மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு 2025 மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம் பவானிசாகர் விளாமுண்டி தலமலை கடம்பூர் தூ.நா. பாளையம் ஆசனூர் கேர்மாளம் தாளவாடி மற்றும் ஜீரகல்லிஆகிய 10வனச்சரகங்களில் சுமார் 17 ஈர நிலப் பகுதிகளில் இன்று கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 40 தன்னார்வலர்கள் பங்கேற்கப்பட்டு வனப்பணியாளர்களுடன் ஈரநில பறவைகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பருவமழையின் காரணமாக பெரும்பாலான நீர்நிலைகளில் நீர் இருப்பு அதிகம் உள்ளதால் ஈர நில பறவைகளின் வருகை அதிகம் உள்ளது கண்டறியப்பட்டது. கணக்கெடுப்பு பணியின் போது மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தில் வலசை வந்துள்ளன ஊசிவால் வாத்து, தட்டைவாயன், கிளுவை, வெண் புருவ வந்து, மண்கொத்தி, பச்சை காலி, விசிவிசிறிவால் உள்ளான், சேற்றுப் பூனைப்பருந்து, மஞ்சள் வாலாட்டி உள்ளிட்ட பறவைகள் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டது.
தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு இறுதி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்படும்.






கருத்துகள் இல்லை