அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 'எனது பூத் தவெக' பூத் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயிற்சி பட்டறை!
வேலூர் மாவட்ட செயலாளர் மற்றும் அணைக்கட்டு மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இணைச்செயலாளர் சீனிவாசன், அணைக்கட்டு சட்ட மன்ற தொகுதி தனசேகர், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் வினோத் கன்னா, பரத், வெங்கடேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் எனது பூத் தவெக என்ற முழக்கத்தை முன்வைத்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு புதிய வியூகங்கள் பற்றியும் தெளிவாக அலசி ஆராயப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மாற்றுக் கட்சியினர் மத்தியில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் யாராவது கள்ள ஓட்டு போட முற்பட்டால் அதை அங்குள்ள தேர்தல் அதிகாரிகளிடம் உடனடியாக தெரிவித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. முறையாக தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வழிவகை செய்து தர வேண்டும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








கருத்துகள் இல்லை