• சற்று முன்

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி கோவில்பட்டி ஒன்றியம் சார்பில் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி

    எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்களின் 63 வது பிறந்த நாளை விழா முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி   கோவில்பட்டி ஒன்றியம் சார்பில் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி - வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

    எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்களின் 63 வது பிறந்த நாளை விழா முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி   கோவில்பட்டி ஒன்றியம் சார்பில் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இழுப்பைஊரணி தாமஸ் நகரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திடலில் வைத்து கபடி போட்டியில் 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். 


    மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி விடுதலை சிறுத்தை கட்சி கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் மாடசாமி தலைமையில் நாட்டாமை ஜெகநாதன், விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர் அணி ஒன்றிய செயலாளர் இசக்கி முத்து, ஆகியோர் முன்னிலையில் கபடி போட்டிகள் நடைபெற்றது. இப் போட்டியை முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் சிவராஜ் பிள்ளை, வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் பெஞ்சமின் பிராங்க்ளின், வழக்கறிஞர் செல்வம் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு விடுதலை சிறுத்தை கட்சி மகளிர் அணி இந்திரா மாடசாமி பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 


    மாவட்ட செய்தி தொடர்பாளர் மனுவேல் ராஜ், விடுதலைச் சிறுத்தை கட்சி நெல்லை மாவட்டம் சிவக்குமார், கீழஈரால் ஒன்றிய கவுன்சிலர் அன்புக்கரசி ராஜீவ் காந்தி, உள்ளிட்ட விடுதலைக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad