• சற்று முன்

    வேலூர் விஐடி பல்கலை., வேந்தருக்கு காட்பாடி ரெட்கிராஸ் வாழ்த்து!

     


    வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் கோ.விசுவநாதனின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்ட கிளையின் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, மாவட்ட மேலாண்மைக்குழு உறுப்பினர் ஆர்.சீனிவாசன், மருத்துவ குழுவின் தலைவர் வீ.தீனபந்து, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பி.என்.ராமச்சந்திரன், ஆர்.சுதாகர், செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளர் வி.பழனி, உள்ளிட்டோர் இன்று பல்கலைகழக வளாகத்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவத்தனர்.  இந்த சந்திப்பின் போது விஐடி பல்கலைக் கழகத்தின் துணைத் தலைவர்கள் சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத்தலைவர் காதம்பரி ச.விசுவநாதன் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளை சிறப்பாக செயலாற்றி வருகிறது பாராட்டுக்கள். தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகள் என்று வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad