• சற்று முன்

    கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக சி.ஐ.டி.யு தொழிலாளர் நலச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்திநடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கைது.


    கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக சி.ஐ.டி.யு தொழிலாளர் நலச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி - கோவில்பட்டியில்  ஒன்றிய அரசை கண்டித்து சி.ஐ.டி.யூ  சார்பில் நடைபெற்ற  சாலை மறியல் போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கைது. 

    ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாகவும், 50 கோடி தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகள் ஆகும் 4  சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழக முழுவதும் இன்று சி.ஐ.டி.யு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன்  தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பேரணியாக செல்ல முற்பட்டவர்களை  போலீசார் தடுத்து நிறுத்தியதல் சாலையில்  அமர்ந்து ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர்  கைது செய்யப்பட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad