தனியார் மருத்துவக் கல்லூரியின் 19வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது
தனியார் மருத்துவக் கல்லூரியின் 19வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்டி (PhD) மாணவர்கள் உட்பட மொத்தம் 1257 பேருக்கு மருத்துவர் பட்டங்கள் வழங்கப்பட்டது
காஞ்சிபுரம் அடுத்த காரப்பேட்டை பகுதியில் உள்ள மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் (MAHER) தனியார் மருத்துவ கல்லூரியின் 19வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அகர்வால் மருத்துவமனையின் குழுமத்தின் தலைவர் கண் மருத்துவர் பேராசிரியர் டாக்டர். அமர் அகர்வால் கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவ மாணவிய மருத்துவர்கள் பட்டம் வழங்கினர்.
இதில் இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்டி (PhD) மாணவர்கள் உட்பட மொத்தம் 1257 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கூடுதலாக, அதிக சதவீதத்தோடு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த 103 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டனர்.
அதே நேரத்தில் MAHER இன் மதிப்பிற்குரிய 10 முன்னாள் மாணவர்கள் 'சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது' களைப் பெற்றனர். மேலும் இந்த ஆண்டு ஆகாஷ் பிரபாகர் சிறந்த விளையாட்டு வீரர் விருது இந்த கல்லூரியின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் பிபிஏ இறுதி ஆண்டு பயிலும் சைனி கிளாசியாவுக்கும் வழங்கப்பட்டது, இந்த மாணவி மாநில மற்றும் தேசிய தடகள போட்டியில் கலந்து கொண்டு சிறந்து விளங்கியதற்காக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நிர்வாக வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், இடைக்கால வேந்தரான கோமதி ராதாகிருஷ்ணன், அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கி பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் மேலும் பட்டங்களை பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் உறவினர்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்






கருத்துகள் இல்லை