ஆயிரம் நாட்களாக போராடி வரும் 'மேல்மா கிராம' மக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் சந்திக்க வில்லை ? த.வெ.க.,வின் பேச்சாளர் ரமேஷ் கேள்வி எழுப்பினார் !
திருவண்ணாமலைக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வந்த, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆயிரம் நாட்களாக போராடி வரும் மேல்மா கிராம விவசாயிகளை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டிருக்கலாமே என, செய்யாறில் நடந்த த.வெ.க.,வின் பொது கூட்டத்தில், மாநில இணை செய்தி தொடர்பாளர் ரமேஷ் பேசினார்.
செய்யாறில் த.வெ.க சார்பில் கொள்கை பரப்புரை பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். செய்யாறு மத்திய ஒன்றிய செயலாளர் புவனேஸ்வரி முன்னிலை வகித்து, அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாநில இணை செய்தி தொடர்பாளர் ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அவர் பேசியதாவது; 'இன்று துவங்கி நாளை ஆட்சியைப் பிடிக்கும் கட்சி த.வெ.க.., அல்ல. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுடன் இணக்கமாக இருந்து வந்தவர் தான் எங்களது தலைவர் விஜய். அவருக்காக கூடும் கூட்டம் தான் இது நாங்களாகவே காசு கொடுத்து அழைத்து வந்த கூட்டம் அல்ல. தமிழக மக்கள் விஜயின் மனதில் பதிந்து விட்டனர். இனி தமிழக மக்களை, விஜயிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது. இதுதான் உண்மை.
தங்களது விவசாய நிலத்தை 'சிப்காட் தொழில் பூங்காவிற்காக' கையகப்படுத்த கூடாது. என, கடந்த 1000 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர், செய்யாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மேல்மா கிராம விவசாயிகள். திருவண்ணாமலைக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மேல்மா கிராம மக்களை சந்தித்து இருக்கலாமே. இதுதான் தி.மு.க., ஆட்சிக்கான அழகா;' இவ்வாறு ரமேஷ் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மண்டல பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என, ஏராளமான கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை