கல்லூரியில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட உதவிப்பேராசிரியர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றதை ஈரோடு மாவட்டம் ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் ஆட்சித்தலைவர் .ச.கந்தசாமி இஆப., அவர்கள் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு கல்வியில் கல்லூரி ஆகிய கல்லூரியில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட உதவிப்பேராசிரியர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றதை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம். இரயில்வே காலனி. நகரவை மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி இஆப., அவர்கள் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு கல்வியில் கல்லூரி ஆகிய கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட உதவிப்பேராசிரியர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றதை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில் தில்லை நகர், வி.வி.சி.ஆர். முருகேசன் செங்குந்தர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கருங்கல்பாளையம், காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கொல்லம்பாளையம், ரயில்வே குடியிருப்பு மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி. பிரப் ரோடு சி.எஸ்.ஐ. மகளிர் மேல்நிலைப்பள்ளி, மீனாட்சி சுந்தரனார் சாலை, செங்குந்தர் அரசு மேல்நிலைப்பள்ளி. கலைமகள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என 06 தேர்வு மையங்களில் 21 மாற்றுத்திறனாளி தேர்வர்கள் உட்பட 1386 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இன்று நடைபெற்ற தேர்வில் 1386-ல் 109 பேர் தேர்வெழுதவில்லை. இத்தேர்வுக்கு 7.8% தேர்வு வரவில்லை. மேலும், இத்தேர்வினை 1277 பேர் தேர்வெழுதினார். இத்தேர்வினை 92.85 சதவீதம் மாணவ மாணவியர்கள் தேர்வினை எழுதினார்கள்.
இந்த ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலர் மான்விழி. உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை