• சற்று முன்

    கோவில்பட்டியில் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் - கல்லூரி மாணவர் உள்பட 2 கைது!

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வக்கீல் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் ஜோதி நகர், கருணாநிதி நகர்,வக்கீல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது வக்கீல் தெருவில் உள்ள திருமண மண்டபம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அவர்கள் இருவரையும் போலீசார் சிறிது தூரம் துரத்தி சென்று மடக்கிப் பிடித்தனர். அவர்கள் கையில் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.


    போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், கோவில்பட்டி எம்.எஸ்.எஸ்.வி. நகரை சேர்ந்த மாரியப்பன் மகன் மணிமாறன் (வயது 26), கோவில்பட்டி ராஜீவ் நகர் 6-வது தெருவை சேர்ந்த மோகன்ராஜ் மகன் புஷ்பராஜ் என்ற ஜான் (19) என்பதும் தெரியவந்தது. இந்த இருவரும் மதுரையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, கோவில்பட்டி பகுதியில் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.இதில் ஜான் கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரியில் அவரோடு படிக்கும் சக நண்பர்களுக்கும் கஞ்சாவை விற்று வந்ததும் தெரியவந்தது.மேலும் இவரது தந்தை மோகன்ராஜ் கோவில்பட்டியில் போதை மறுவாழ்வு மையம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த 2 பேரும் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிபதி உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad