ஈரோடு மாவட்டம். சென்னிமலை ஊராட்சி ஒன்றியம்.நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமினை மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் சென்னிமலை திப்பம்பாளையம் பகுதியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின்திட்ட மருத்துவ முகாமினை நேரில் பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம். சென்னிமலை ஊராட்சி ஒன்றியம். திப்பம்பாளையம், அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமினை மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் 02.08.2025 அன்று துவக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தினால் எண்ணற்ற பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 25 மற்றும் 26-வது மருத்துவ முகாம் இன்று 27.12.2025 சென்னிமலை ஊராட்சி ஒன்றியம். திப்பம்பாளையம். அரசு உயர்நிலைப் பள்ளியிலும், கோபிசெட்டிபாளையம், முருகன்புதூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்றது. இம்மருத்துவ முகாம்களில் 17 சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தார்கள். இம்முகாம்களில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கண் பரிசோதனை, பல் சிகிச்சை. ரத்தப்பரிசோதனை, ECG, X-RAY பரிசோதனைகளும் கூடுதலாக பெண்களுக்கு கர்பப்பைவாய் புற்றுநோய். மார்பக புற்றுநோய் பரிசோதனைகளும் செய்யப்பட்டது. மருத்துவர்கள் பரிசோதனை செய்து தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கி, மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறப்பு மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்து ECHO போன்ற உயர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு. உயர் சிகிச்சை தேவைப்படுவோர் பரிந்துரை செய்யப்பட்டார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 24 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது. இந்த முகாம்களில் 34,654 பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் உயர் சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டது. 19,975 நபர்களுக்கும் ECG-ம் 23.868 நபர்களுக்கும், ஆய்வக பரிசோதனையும் 2,297 நபர்களுக்கும், X-RAYம், 2,115 நபர்களுக்கும் Scan-ம். 2,603நபர்களுக்கும் ECHO-ம், முதலமைச்சரின் காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டை 740 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும். காசநோயாளிகளுக்கு மருந்து பெட்டகங்களும், 4 பள்ளி வளர் இளம் பெண்கள் பருவத்துற்கான சித்த மருத்துவ பெட்டகங்களும், 5 நபர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகங்களும் என 19 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) பிரியா. சென்னிமலை பேரூராட்சி தலைவர் .ஸ்ரீதேவி. மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அருணா, மருத்துவர்கள். செவிலியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர






கருத்துகள் இல்லை