வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 15 ஆம் ஆண்டு ஆறுபடைவீடு பக்தர்கள் ஆன்ம்ீக யாத்திரையின் தேர்த்திருவிழா
வேலூர் மாநகரம், தொரப்பாடி அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 15 ஆம் ஆண்டு ஆறுபடை வீடு பக்தர்கள் ஆன்மிக யாத்திரை நடத்தும் தேர் திருவிழா நடைபெற்றது .தேர் திருவிழாவை எம்எல்ஏ கார்த்திகேயன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார் . வேலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை தலைவர் அசோகன், அப்பு என்கின்ற தனசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டாளர்கள் ஜோதி, மூர்த்தி, முரளி, சிவா ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர் .காலையில் விநாயகருக்கு அபிஷேகம், முருகர் அபிஷேகம் அதனைத் தொடர்ந்து பிரகார மூர்த்திகளுக்கு அபிஷேகம், அர்ச்சனை, மகா தீபாரதனை நடைபெற்றது. நண்பகல் 12 மணி அளவில் அன்னதானம் நடைபெற்றது. இதனை வேலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை தலைவர் அசோகன் தொடங்கி வைத்தார். அப்பு என்கின்ற தனசேகர் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீதரன், பாஸ்கரன், சங்கீதா பாபு ,ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்






கருத்துகள் இல்லை