விடியல் 3வது நானோ தொழில்நுட்ப மாநாடு!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பழைய காட்பாடி, வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப 4 நாள் மாநாடு தொடக்க விழா, வி ஐ டி பல்கலைக்கழக நிறுவன தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, அமெரிக்க எம்.ஐ.டி. பேராசிரியர் மவுங்கி பவெண்டி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விழாவை சிறப்பித்தனர்.
20 நாடுகளைச் சேர்ந்த 42 சர்வதேச கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் உள்ளிட்ட 300 பேர் பங்கேற்ற மாநாட்டில், நானோ பொருட்கள், நானோ எலக்ட்ரானிக்ஸ், நானோ மருத்துவம், ஆற்றல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல தலைப்புகள் விவாதிக்கப்பட்டன. ஆராய்ச்சியில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. இந்த மாநாட்டில் வி.ஐ.டி. நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்






கருத்துகள் இல்லை