குப்பை கொட்ட பாறைக் குழியை தேடும் நிலை!
விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டத்தில் திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்கம் வேதனை.வெள்ளியம்பாளையத்தில் இன்று குப்பை கொட்டுவதை நிறுத்திட வேண்டி போராடியதால் கைது செய்துள்ள விவசாயிகள் பொது மக்கள் பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
ஊத்துக்குளி வட்டத்திலுள்ள சர்க்கார் பெரிய பாளையம், அக்ரஹார பாளையம், வெள்ளியம்பாளையம் பகுதிகளில் குப்பை கொட்டுவதை நிறுத்திட வேண்டும்.
திருப்பூர் மாநகராட்சியில் குப்பையை அப்படியே பாறைக்குழியில் கொட்டிவிட்டு சென்றால், நிலத்தடி நீர் உட்பட அனைத்தும் மாசுபடும். அரசின் வழிகாட்டுதல்படி, திடக்கழிவு மேலாண்மையை திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்த வேண்டுமென சப்-கலெக்டரிடம் திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.
திருப்பூர் கோட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டம் திருப்பூர் குமரன் சாலையிலுள்ள கோட்டாச்சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியர் மதிப்புக்குரிய மோகனசுந்தரம் அவர்கள் இல்லாததால் நேர்முக உதவியாளர் நந்தகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்க தலைவர் ஈ.பி.அ.சரவணன் கலந்து கொண்டு பொது மக்களுக்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
அதன் விபரங்கள்...
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்திலுள்ள சர்க்கார் பெரிய பாளையம், அக்ரஹார பாளையம், வெள்ளியம்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நலன் கருத்தில் கொண்டு அங்குள்ள பாறைக்குழியில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதை உடனடியாக முற்றிலுமாக தடைசெய்ய போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டும்.
திருப்பூர் மாநகராட்சி கடந்த 2008-ம் ஆண்டு மாநகராட்சியாக திருப்பூர் உதயமானது. தற்போது 17.ஆண்டுகளாகியும் பாறைக்குழியை தேடி வருவது வேதனையை அளிக்கிறது”திருப்பூர் சுற்றியுள்ள பகுதியில் பாறைக்குழியை தேடும் போக்கை கைவிட்டு, நிரந்தரமாக திடக்கழிவு மேலாண்மையை பின்பற்றும் விதமாக, ஒருங்கிணைந்த குப்பை கொட்டும் இடத்தை மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளன
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்திலுள்ள சர்க்கார் பெரிய பாளையம், அக்ரஹார பாளையம், வெள்ளியம்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுகிறோம். சுமார் 20 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்..
திருப்பூர் மாநகராட்சியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான டன் குப்பை சேகரமாகிறது. கடந்த சில மாதங்களாக இந்த குப்பை, தற்காலிகமாக திருப்பூர் வடக்கு நெருபெரிச்சல் பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளையத்திலுள்ள கைவிடப்பட்ட பாறைக்குழியிலும், மங்கலம் இச்சிப்பட்டி உள்ளிட்ட இடங்களிலுள்ள பாறைக்குழியிலும் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, பேச்சுவார்த்தை மூலமாக சமரசம் செய்யப்பட்டது.
மாநகரில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக பகுதிகளில் இருந்து அதிகளவு குப்பை நாள்தோறும் சேகரமாகிறது. அதன்படி, 60 வார்டுகளிலுள்ள சுமார் 600 டன் குப்பை இங்கு கொட்டப்பட்டால், இந்த பகுதியில் குடியிருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். நிலத்தடி நீர், காற்று மாசு, கடும் துர்நாற்றம், குப்பை வாகனங்கள் வரும் வழிநெடுக காற்றில் கலக்கும் நெடி உள்ளிட்ட வற்றால் பாதிக்கப்படுகின்றன
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எடுக்கப்படும் குப்பையை அப்படியே பாறைக்குழியில் கொட்டிவிட்டு சென்றால், நிலத்தடி நீர் உட்பட அனைத்தும் மாசுபடும். அரசின் வழிகாட்டுதல்படி, திடக்கழிவு மேலாண்மையை திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்த வேண்டும்.
எனவே திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்திலுள்ள சர்க்கார் பெரிய பாளையம், அக்ரஹார பாளையம், வெள்ளியம்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நலன் கருத்தில் கொண்டு அங்குள்ள பாறைக்குழியில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதை உடனடியாக முற்றிலுமாக தடைசெய்ய போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டுமென திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை