நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் அறக்கட்டளை, அரசு பொது மருத்துவமனை இணைந்துமாபெரும் இரத்த தான முகாம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் அறக்கட்டளை, அரசு பொது மருத்துவமனை இணைந்து உலக இரத்த தான கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம் குமாரபாளையம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
தளிர்விடும் பாரதம் அறக்கட்டளை தலைவர் சீனிவாசன், ஈரோடு மாவட்ட இரத்த தான ஒருங்கிணைப்பாளர் கவியரசு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இரத்த தான முகாமை மருத்துவர் நித்தியானந்தன் தொடங்கி வைத்தார்.
தளிர்விடும் பாரதம் வரதராஜன், தனசேகரன், ஞானசேகர், செந்தில்குமார், பாலாஜி, சின்னையன் மற்றும் செவிலியர்கள் மேனகா, தேன்மொழி ஆகியோர் இரத்த தான முகாமின் சுமூகமான செயல்பாட்டை மேற்பார்வையிட்டனர்.
குமாரபாளையத்தில் உள்ள பல்வேறு பொது நல அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் இரத்த தான கொடையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இரத்த தானம் செய்ய முன்வந்தனர். இந்த செயல் அரசு இரத்த வங்கிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தது. தானம் செய்யப்பட்ட இரத்தத்தை சேகரிக்க திருசெங்கோடு அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவ அலுவலர் செந்தில்குமார், கண்ணன் மற்றும் குழுவினர் வருகை தந்திருந்தனர். தளிர்விடும் பாரதம் அறக்கட்டளையின் இந்த முயற்சி இரத்த கொடையாளர்கள் தினத்தை நினைவு கூர்வது மட்டுமின்றி பொதுமக்களிடையே சமூக பொறுப்புணர்வையும், சுகாதார விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதாக அமைந்தது என பொதுமக்கள் பாராட்டினர்.
முடிவில் தளிர்விடும் பாரதம் அறக்கட்டளையின் செயலாளர் பிரபு அனைவருக்கும் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை