ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம் பட்டரையில் அருள்மிகு ஸ்ரீ ஊமை சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ சப்த முனீஸ்வரருக்கு மஹா கோயில் கும்பாபிஷேக மிக சிறப்பாக நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம் பட்டரையில் அருள்மிகு ஸ்ரீ ஊமை சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில்ஸ்ரீ சப்த முனீஸ்வரருக்கு மஹா கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடந்த 02.05.2025 வெள்ளிக்கிழமை அன்று கணபதி ஹோமம், கோ பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இரண்டாம் நாள் 05.05.2025 சனிக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம், அஷ்டபந்தனம் சாற்றுதல், பூர்ண ஹூதியுடன் தீபாராதனையும் நடந்தது. காலை நான்காம் காலயாக சாலை பூஜையுடன் துவங்கியது சதுர்வேத பாராயணம் கடம் புறப்பாட்டுடன் நிகழ்ச்சிகள் துவங்கியது.காலை 09 முதல்10.30மணிக்க ஸ்ரீ சப்த முனீஸ்வரருக்கு கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியில் ஆம்பூர் சான்றாங்குப்பம் சாமியார் மடம் கிருஷ்ணாபுரம் அழகாபுரி தேவலாபுரம் நகரப்புறம் கிராமப்புறம் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.பின்னர் குருக்கள் அப்பு அவர்கள் தலைமையில் நடந்தது கும்பாபிஷேகம் விழா
இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் ஆம்பூர் திருமலை
கருத்துகள் இல்லை