வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டன இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டன இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் 28 பேர் பஹல்காம் மாவட்டத்தில் 21.4.2025 அன்று பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலில் இறந்ததை கண்டித்து வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி நிர்வாகத்தினர்களுடன் 500 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 3000 மாணவிகள் 23.4.2025 அன்று பகல் 1.30 மணிஅளவில் கல்லூரி வளாகத்தில், அக்குடும்பத்திற்க்கு ஆழ்ந்த வருத்தத்தையும், மன அமைதி பெற மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். நம் நாட்டில் தீவிரவாதம் ஒழியவும் அமைதி நிலவவும் உறுதிமொழி ஏற்று பதாகைகளுடன் கண்டனத்தை தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் ஆம்பூர் திருமலை
கருத்துகள் இல்லை