'10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை சொகுசு கார் பறிமுதல் செய்த வாலாஜா போலீசார் எஸ் பி பாராட்டு !!!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சென்னசமுத்திரம் சுங்கச்சாவடி அருகே வாலாஜா நகர போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்
அப்போது வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியை நோக்கி வேகமாக வந்த காரை சோதனை இட்டபோது கார் முழுவதும் கருப்பு துணியால் அடைக்கப்பட்டு இருந்ததை சந்தேகத்தின் பெயரில் பரிசோதனை செய்ததில் ஒரு டன்குட்கா பொருட்கள் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.மேலும் இதில் பெங்களூர் சேர்ந்த கல்யாணராம் வயது (26) ராஜஸ்தானை சேர்ந்த கனாராம் வயது (29) ஆகிய இரு வாலிபர்கள் பெங்களூருவில் தங்கி குட்காவை சென்னைக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது மேலும் அவர்களிடமிருந்து ஒரு டன் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து சிறையில் அடைத்தனர்
சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்..
கருத்துகள் இல்லை