• சற்று முன்

    பொது மக்களுக்கும், பெண்களுக்கும் சட்ட விழிப்புணர்வு பற்றிய நிகழ்ச்சி

    வாலாஜாபேட்டை இலவச சட்டப் பணிகள் குழு தலைவர் நீதியரசர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று வாலாஜாபேட்டை நகரம், இராயஜி குளக்கரை தெருவில் அமைந்துள்ள அருள்மிகு இராமர் திருக்கோவில் வளாகத்தில் அதன் அறங்காவலர் S.K. மோகன் அவர்களின் ஏற்பாட்டின்படி இலவச சட்ட பணிகள் குழு வழக்கறிஞர்கள் K.இளங்கோவன், 

    G.ஶ்ரீதரன்B.விஜயகுமார் W.K.சுதாகர்பாபு M.S.செந்தில்குமார் S.புருஷோத்தமன் S.சக்திவேல்குமரன் C.கோபாலகிருஷ்ணன், ஆகிய வழக்கறிஞர்கள் பொது மக்களுக்கும், பெண்களுக்கும் சட்ட விழிப்புணர்வு பற்றிய நிகழ்ச்சி நடத்தினார்கள். அப்போது சீதாராம ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான வன்னிவேடு  பஞ்சாயத்து, ராஜீவ்காந்தி நகர் தேவதானம் சாலை வன்னிவேடு  கிராமத்தில் உள்ள பட்டா எண்.885-இல் அடங்கிய எக்கர் 1.64 சென்ட் காலி இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்க காவல்துறை பாதுகாப்பு வேண்டி கோவில் அறங்காவலர் எஸ்.கே.மோகன் அவர்கள் மனு வழங்கினார். அம்மனுவைப் பெற்றுக் கொண்ட சட்டப்பணி குழு வழக்கறிஞர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கோவில் சுற்றுச்சுவர் அமைக்க நீதிமன்றம் உறுதுணையாக இருக்கும் என உறுதி அளித்தனர். நிகழ்சியில் இறுதியாக  மகாலட்சுமி, வட்ட சட்டப் பணிகள் குழு அலுவலர் நன்றி உரையாற்றினார்.

    ஒருங்கிணைந்த சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad