• சற்று முன்

    காஷ்மீர் மாநிலம் பாஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளில் துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீர்த்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

    காயம் அடைந்த வர்களும் விரைந்து நலம் பெற வேண்டி காமாட்சி அம்மனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது. காஷ்மீர் மாநிலம்  பாஹல்காம் பகுதியில் சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 25க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தும்  பல பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

    இதனை அடுத்து ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரியார் ஜெகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி அவர்களின் வேண்டுகோளின் படி காஷ்மீர் மாநிலம் பாஹல்காம் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

    மேலும் தீவிரவாத தாக்குதலில் சிக்கி படுக்காயம் அடைந்தவர்கள் விரைவில் நலமடைய வேண்டியும்  காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad