• சற்று முன்

    காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணிக்கு நேர்காணல் நடைபெற்றது

    காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணியின் ஓன்றிய,நகர,பேருர்,பகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பதவிக்கான நேர்காணல் நேற்று காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது . 

    :திமுக தலைவர் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மாநில பொறியாளர் அணி செயலாளர் கே.பி.கருணா வழிகாட்டுதலின்படி, பொறியாளர் அணி பொறுப்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது.காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொறியாளர் அணி ஒன்றிய,நகர பேருர மாநகராட்சி மற்றும் பகுதி அமைப்பாளர் துனை அமைப்பாளர் விண்ணப்பித்தவர்களுக்கு மாலை திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது . இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மாநகராட்சி செயலாளர் CKV தமிழ்செல்வன் , தலைமைசெயற்குழு உறுப்பினர் திரு M.S.சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாநில துணை செயலாளர் வே.உமாகாந்த்  மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆ.சசிகுமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. நேர்காணலில் மாவட்ட பொறியாளர் அணி துணைத் தலைவர் தணிகை அரசு, துணை செயலாளர்கள் மணிகண்டன்,நடராசன், இளைபாரதி மற்றும் C.N.பிரபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

    செய்தியாளர் : திணேஷ் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad