வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவை கண்டித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவை கண்டித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் பூக்கடை மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். மத்திய அரசு மதவெறுப்பு அரசியலை கைவிட வேண்டும் என தெரிவித்த த.வெ.க.வினர் உடனடியாக இசுலாமியர்களின் உரிமையை பறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள வக்பு சட்டதிருத்த மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்
ஒருங்கிணைந்த சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்..
கருத்துகள் இல்லை