செய்தியாளர் வ.மணிமாறன் தந்தை சூரக்குடி சி.வயிரவன் மறைவுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பேரமைப்பு ஆழ்ந்த இரங்கல்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம் மு.சூரக்குடி முன்னோடி சி.வயிரவன் (86) இன்று (29.10.2024) காலை 11 மணிக்கு, வயது மூப்பின் காரணமாக அவரது இல்லத்தில் காலமானார்
சி.வயிரவன், மூத்த மகன் வ.மணிமாறன் ஜனசக்தி வார இதழ், ஜனசக்தி வலையொலி, யூடியூப் சேனல் ஆகியவற்றின் மூத்த செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தேர்வு செய்யப்பட்ட பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் மறைவுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பேரமைப்பு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு தோழர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.
மாநிலத் தலைவர்
இளசை கணேசன்
கருத்துகள் இல்லை