வேலூர் மாநகராட்சி கூட்டம் பாமக வெளிநடப்பு உள் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யவும் புகைப்படம் எடுக்கவும் செய்தியாளர்களுக்கு அனுமதியில்லை
வேலூர்மாவட்டம்,வேலூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டமானது மேயர் சுஜாதா தலைமையில் நடந்தது இதில் துணை மேயர் சுனில் ஆணையர் ஜானகி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர் இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மாநகராட்சி கூட்டத்தில் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் 5 நிமிட மட்டுமே செய்தி சேகரிக்க வேண்டுமென புதிய விதியை கொண்டு வந்து தடுத்து நிறுத்தப்பட்டனர் மேலும் மாநகராட்சி உறுப்பினர்கள் பேசுகையில் மாநகராட்சியின் அங்கிகாரமில்லை 10 ஆயிரம் குடிநீர் குழாய் இணைப்பு உள்ளதை கண்டறிந்து துண்டிக்க வேண்டும் சாலை வசதி தெருவிளக்கு ,கழிவு நீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை உறுப்பினர்கள் பேசினார்கள்
இந்த நிலையில் பாமக மாமன்ற உறுப்பினர் பாபி கதிரவன் என்பவர் தனக்கு பேச வாய்ப்பு அளிக்கவில்லை என கூறி தன் வார்டு புறக்கணிக்கபடுவதாக கூறி வெளிநடப்பு செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் தன்னை பேசவிடாமல் தடுத்ததாகவும் கடந்த கூட்டத்தில் பேசியதிலும் எந்த பயனுமில்லை எனவே வெளிநடப்பு செய்வதாக கூறி வெளிநடப்பு செய்தார்
செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ்
கருத்துகள் இல்லை