ரயிலில் கடத்தி வரப்பட்ட 18 கிலோ கஞ்சா பறிமுதல்!
புனேவிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் அதிவிரைவு ரயிலில் மர்மமான முறையில் இரண்டு ட்ராவல் பேக்குகள் இருப்பதாக பயணிகள் காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அந்த ரயிலில் ஏறி தீவிரமாக பரிசோதனை செய்தனர். அப்போது இந்த சோதனையில் ரயிலில் s6 என்ற கோச்சில் கவனிக்கப்படாமல் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை எடுத்து சோதனை செய்தனர். அப்போது அதில் 18 கிலோ கஞ்சா மறைத்து கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் இந்த பைகளை யார் கொண்டு சென்றது? யார் பையுடன் ரயிலில் ஏறியது. இந்த பையை கொண்டு பல்வேறு ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் என்பது குறிப்பிடத்தக்கது
செய்தியாளர் :வாசு தேவன் .
கருத்துகள் இல்லை