தமிழக வெற்றி கழகம் சார்பில் காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ராணிப்பேட்டை, அக். 02 - ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் ஜி. மோகன் தலைமையில் புதனன்று (அக். 02) முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் நகர பொறுப்பாளர்கள் பூத். செந்தில், வெ. மணிகண்டன், கே. சஞ்சய், எஸ். அசோக்நரேன், டி. தினேஷ், எஸ். அசோக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : R.J.சுரேஷ்
கருத்துகள் இல்லை