திருவள்ளூர் மாவட்டம் பி. சீனிவாசராவ் நினைவு தினம்
தமிழ் மாநில விவசாய தோழர் சங்கத்திலன் சார்பில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம், காந்திநகர் திரௌபதி அம்மன் நகரில், விடுதலைப் போராட்ட வீரர், விவசாய தொழிலாளர்களின் விடிவெள்ளி பி. சீனிவாசராவ் நினைவு தினம் மாவட்டத் துணைத் தலைவர் கே. போஸ் தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் என்.எஸ். பிரதாப் சந்திரன், மாவட்ட துணை செயலாளர் எம். பி. குமார், சோழவரம் ஒன்றிய தலைவர் ஆர். பஞ்சநாதன், மாவட்ட குழு உறுப்பினர் செங்குன்றம் மதி, ஒன்றிய துணைத் தலைவர் ஆர். கருப்பசாமி, ஞாயிறு எஸ். உதயன் உள்ளிட்ட ஏராளமானோ பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை