மகாத்மா காந்தியடிகளின் 156 வது பிறந்த தின விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் சிறப்பு விற்பனையினை துவக்கி வைத்தார்
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள் இன்று (02.10.2024) மகாத்மா காந்தியடிகளின் 156 வது பிறந்த தின விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாலாஜாப்பேட்டை கதர் அங்காடியில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் மூலம் 2024 ஆம் ஆண்டு கதர் சிறப்பு விற்பனையினை துவக்கி வைப்பதற்கு முன்னதாக, அங்கு வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர். ஜெ.யு. சந்திரகலா. இ.ஆ.ப.. வாலாஜா நகர மன்றத் தலைவர் ஹரிணி தில்லை. ஒன்றியக் குழுத் தலைவர் வெங்கட்ரமணன், நகரமன்ற துணைத் தலைவர் திரு. கமலராகவன், காதி கிராப்ட் உதவி இயக்குநர் நாகலிங்கம். மேலாளர் ராணி மற்றும் நகர செயலாளர் து.தில்லை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத்.மக்., மற்றும் பலர் உள்ளனர்.
செய்தியாளர் : R.Jசுரேஷ்
கருத்துகள் இல்லை