விபச்சார வழக்கில் சென்னை பெண் புரோக்கர் தாராபுரத்தில் கைது
தாராபுரம் பகுதியில் சட்டவிரோதமாக விபச்சாரம் நடைபெற்று வருவதாக தாராபுரம் போலீசார் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தாராபுரம் தனிப்பிரிவு போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். தாராபுரம் டவுன் கண்ணன் நகர் பகுதியில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக விபச்சாரம் நடைபெற்று வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட புரோக்கராக செயல்பட்ட பெண்ணை தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரனையில்சட்டவிரோதமாக விபச்சாரத்தில் ஈடுபட்டவர் சென்னையைச் சேர்ந்த பெண் புரோக்கர் கற்பகம் (வயது 26 )இவருக்கு தனபாலன் என்பவர் உடன் திருமணமானது தெரிய வந்தது. தாம்பரத்திலிருந்து தாராபுரம் பகுதிக்கு வந்து கண்ணன் நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. தாராபுரம் காவல் ஆய்வாளர் விஜய சாரதி தலைமையில் வழக்கு பதிவு செய்து கற்பகத்தைகைது செய்தனர். கற்பகத்தை தாராபுரம் நீதிமன்றத்தில் ஆச்சாரப்படுத்தி 15- நாள் சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : முனியப்பன்
கருத்துகள் இல்லை