பெரிய காஞ்சிபுரம் தர்காவில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்புத் தொழுகை.
உலக மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் நலமுடனும் வாழ வேண்டும் என வேண்டிக் கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டார். கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் 638 ஆண்டுகளுக்கு முன்பு சமாதி அடைந்து எல்லா மதத்தினராலும் போற்றப்பட்டு, தரிசனம் செய்ய வருபவர்களுக்கு அனுதினமும் அருளாசி வழங்கி பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி வரும் ஹஜ்ரத் காஜா சையத் ஷாஹ் ஹமீதுத்தீன் அவுலியா பாதுஷா சிஷ்தி தர்கா எனப்படும் பெரிய காஞ்சிபுரம் செங்கழு நீரோடையில் உள்ள பெரிய காஞ்சிபுரம் தர்காவின் திரு சந்தனக்கூட உருஸ் உற்சவம திருவிழா நடைபெற்று வருகிறது.
திருச் சந்தனக்கூடு உருஸ் உற்சவ திருவிழாவில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு மசூதியில் அமைந்துள்ள சமாதிக்கு மலர் போர்வை அணிவித்து, உலக மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் நலமுடனும் வாழ வேண்டும் என வேண்டிக் கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டார்.
பின்னர் கூடியிருந்த முஸ்லிம் பெருமக்களுக்கு தானங்களையும் வழங்கிவிட்டு, சந்தனக்கூடு உருஸ் உற்சவ திருவிழாவை சிறப்புடன் நடத்த தர்கா நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி விட்டுச் சென்றார்.
செய்தியாளர் :தினேஷ்
கருத்துகள் இல்லை