• சற்று முன்

    தாராபுரத்தில் மழையில் முற்றிலும் இடிந்து விழும் தருவாயில் அங்கன்வாடி மையம்

    தாராபுரத்தில் மழையில் முற்றிலும் இடிந்து விழும் தருவாயில் அங்கன்வாடி மையம். குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோர். விரைவில் தர்ணாவில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி 30-வார்டுக்கு உட்பட்ட 7"வார்டு ஜின்னா மைதானம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

    இப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அங்கன்வாடி மைய கட்டிடம் பருவமழையினால் மிகவும் சேதம் அடைந்து இடிந்து விழும் தருவாயில் அபாயகரமான நிலையில் உள்ளது. இந்த மையத்தை புனரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் பலமுறை அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது தற்பொழுது கடந்த 5- நாட்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வருவதால் அங்கன்வாடி மைய கட்டிடம் முழுவதும் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.

    இதனால் அங்கன்வாடி மையக் கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடலாம் என்ற மிகவும் அச்சம்காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப மறுத்து தங்களுடன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.  மேலும் பாதுகாப்பற்ற இந்த கட்டிடத்தில் குழந்தைகளை அனுப்ப முடியாது என அங்கன்வாடி மைய ஊழியர்களுடன் பெற்றோர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். உடனடியாக அங்கன்வாடி மைய கட்டிடத்தை புதிய கட்டிடத்திற்கு மாற்றி தர  வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுவோம் என தெரிவித்துள்ளனர்.


    செய்தியாளர் : முனியப்பன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad