குடியாத்தத்தில் ரூ.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மருத்துவப் பணிகளை ஆய்வு
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, குடியாத்தத்தில் ரூ.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர் விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, மக்கள் பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயராமன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி, நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன், வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் என பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர் : ஆர்,ஜே. சுரேஷ்
கருத்துகள் இல்லை