ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து விழிப்புணர்வு
இராணிப்பேட்டை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் *திருமால்* அவர்களின் உத்தரவின் பேரில் ஆற்காடு கிராமிய காவல் ஆய்வாளர் *சாலமோன் ராஜா* அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் மகாராஜன் அவர்கள் தலைமையிலான போலீசார் வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஸ் நிலையம் அருகே உள்ள 17 வது மற்றும் 11 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொது மக்களுக்கு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெண்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : ஆர் கே சுரேஷ்
கருத்துகள் இல்லை