வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், மாநகராட்சிக்கு உட்பட்ட 58 வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக பொது தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய கிராமப்புற விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் 58 வது வார்டு சுகாதார சீர்கேடும் மற்றும் நாராயணி பவன் ஹோட்டல் நிர்வாகத்தை அனைத்தும், நாராயணி குழுமம் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு மற்றும் பல்வேறு ஆக்கிரமிப்புகள் குறித்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட துணைச் செயலாளர் ஜி.செந்தில்நாதன் மற்றும் ஆர்.பாத்திமா தலைமையிலும், சங்கர், செல்வம், சிவகுமார், யுவராஜ், ரமேஷ், சதீஷ்குமார், பழனி ஆகியோர் முன்னிலையில் நாராயணி குழுமம் நெடுஞ்சாலைகள் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்ட பேருரை மாவட்ட செயலாளர் எம் சரோஜா, மாணிக்கம் ஏழுமலை சிம்பு தேவன் தசரதன் கோபால் மலர் மகேஷ் சதீஷ் வாசுதேவன் விஜயகுமாரி பாலாஜி ஆகியோருடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தோழமை அமைப்புகளுடன் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கொடிகளை கையிலேந்தி 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
கருத்துகள் இல்லை