காட்பாடி சேனூரில் வேட்டி சேலை வழங்கும் விழா அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமூக பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு சேனூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விலையில்லா வேட்டி, சேலைகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வேட்டி சேலைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருகுணஐயப்பதுரை, காட்பாடி ஒன்றிய குழு துணை தலைவர் சரவணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுலோக்சனா கிருபாகரன், ஒன்றிய குழு உறுப்பினர்எஸ். பிரபு, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, சேனூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்திமணி, துணை தலைவர் மஞ்சுளா சந்தானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வாசுதேவன்
கருத்துகள் இல்லை