கும்பகோணம் அருகே அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்....
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கருவளர்ச்சேரி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் கும்பகோணம் சீதாலட்சுமி அறக்கட்டளை தலைவர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வள்ளலார் அரிமா சங்கத் தலைவர் ரவி, பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய மேரி,பள்ளி ஆசிரியர் அறிவுடை நம்பி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் பள்ளி மாணவ மாணவிகளின் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், அரிமா சங்க நிர்வாகிகள் செயலாளர் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை