தும்பவனத்தம்மன் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமிய ஒட்டிசிறப்பு கலச பூஜை நடைபெற்றது.
தும்பவனத்தம்மன் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமிய ஒட்டி ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் காட்சியளித்த தும்பவனத்தம்மன்
.காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தும்பவனம் பகுதியில் உள்ள கிராம தேவதையான தும்பவனத்தம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த தும்பவனத்தம்மன் ஆலயம் பல்வேறு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறது. தும்பவனத்தம்மனுக்கு புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி சிறப்பு கலச பூஜை நடைபெற்றது. கலச பூஜை நடைபெறுவதற்கு முன்னதாக தும்பவனத்தம்மனுக்கு பால், தேன், இளநீர், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட சிறப்பு பொருட்களில் அபிஷேகம் செய்யப்பட்டு தும்பவனத்தம்மன் வெள்ளி உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் கோவில் வளாகத்தில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தும்பவனத்தம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ஊஞ்சலில் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் ஊஞ்சல் சேவையில் காட்சி அளித்த தும்பவனத்தம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
செய்தியாளர் :தினேஷ்
கருத்துகள் இல்லை