• சற்று முன்

    காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான நபர்கள் கலந்துகொண்டு நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான நபர்கள் கலந்துகொண்டு நேர்முகத் தேர்வில் பங்கேற்று வருகின்றனர். 

    இந்தாண்டு பத்துக்கும் மேற்பட்ட தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற்று , 8000 பேருக்கு மேல் பயன்பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு  மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாதந்தோறும் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அவ்வகையில் இன்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலை நிறுவன மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களுக்குரிய ஆட்களை தேர்வு செய்ய வருகை புரிந்தனர். முன்னதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இணை இயக்குனர் அருணகிரி, வேலை நாடுவோருக்கு பல்வேறு வகையிலான ஆலோசனைகளை வழங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாகவும்,  இதில் விருப்பம் உள்ளவர்கள் பயனடையலாம் எனவும், வேலை நாடுவோர் தங்களுக்குரிய வேலையை பெற தங்களை பல்துறையில் வல்லுநர்களாக வளர்த்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார். 


    இதில் 200க்கும் மேற்பட்ட  ஆண்,  பெண் வேலை நாடுவோர் தங்களது சுய விவர குறிப்புகளை தொழிற்சாலை நிறுவனங்களிடம் வழங்கி நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு வருகின்றனர்.  தனியார் தொழிற்சாலையில் எட்டாம் வகுப்பு முதல் உயர் கல்லூரி படிப்பு வரை முடித்தவர்களுக்கு பல்வேறு வகையிலான வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும் அதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தொழிற்சாலை நிர்வாகிகள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

    காலை 10 மணிக்கு துவங்கிய இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாலை 3 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தாண்டு இதுவரை இது போன்று பத்து தனியார் தொழிற்சாலை வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற்றும் , இரண்டு அரசு மெகா வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்களும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று 8000க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர்.


    செய்தியாளர் :தினேஷ் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad