பேரணாம்பட்டு நகராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா, பேரணாம்பட்டு நகராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொட்டாறு கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமுலு விஜயன், பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் பிரேமா, துணைத் தலைவர் அலியார் ஜுபேர் அகமது, ஆணையாளர் வேலவன் வட்டாட்சியர் வடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி வருவாய்த்துறை அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்,
செய்தியாளர் : வாசுதேவன்
கருத்துகள் இல்லை