• சற்று முன்

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு சிறப்பாக நடக்க வேண்டும் என கோவிலில் அர்ச்சனை செய்து வழிபட்ட த.வெ.க நிர்வாகிகள்

    தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தலைமையில் வருகின்ற 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்அந்தக் கட்சிக்கான முதல் மாநாடு நடைபெற உள்ளது.இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தமிழக வெற்றிக் கழக கட்சித் தொண்டர்கள் மாநாட்டில் பெரு வாரியாக பங்கேற்பது குறித்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கொல்லுமாங்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருவாரூர் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு முன்னதாக தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வெற்றி பெற வேண்டும் என அருகில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் கட்சி நிர்வாகிகள் நடிகர் விஜய்யின் புகைப்படத்துடன் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.அதனைத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    அப்போது தமிழக வெற்றிக்கழக திருவாரூர் மாவட்ட தலைவர் மதன் கூறுகையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக பயணித்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் உண்மையாக உழைக்க வேண்டும்.அப்போது தான் தமிழகம் நமது தளபதியின் கோட்டையாக மாறும் மேலும் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களை அழைத்து வருவது குறித்தும் அவர்களுக்கு வாகன ஏற்பாடு செய்வது மற்றும் பாதுகாப்பு குறித்தும் பேசினார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் மதன் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ஆதி மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக் மாவட்ட இளைஞரணி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் :இளவரசன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad