• சற்று முன்

    வடக்கு மண்டலத்தில் போதை வஸ்து ரைடு!!! - திருப்பத்தூரில் மூட்டை மூட்டையாக பறிமுதல்

    காவல் துறையில் வடக்கு மண்டல ஐஜியாக அஸ்ராகார்க் இ.கா.ப.அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது போதை வஸ்துவான குட்காவை அறவே ஒழிக்க கூட்டு ரைடு முடுக்கி விடப்பட்டிருக்கிறது.  

    அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    வேலூரில்? ராணிப்பேட்டை???? மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் ரைட்டு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது... சோளிங்கரில் பஜார் தெருவில் உள்ள சில கடையில் குட்கா விற்பனை செய்வதாக சோளிங்கர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில்  சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ் தலைமையில் போலீசார் சம்மந்தப்பட்ட கடையில் சோதனை செய்ததில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது உறுதியானது.உடனடியாக அவருக்கு சொந்தமான லிங்கா ரெட்டி தெருவில் இருக்கும் குடோனை சோதனை செய்தனர்.

    அங்கு விற்பனைக்காக வைத்திருந்த  15 குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து உரிமையாளர் ரமேஷ் குமார் (29), பேரா ராம் தேவாசி (20) இருவரையும் கைது செய்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம்,

    இங்கு இரண்டாவது  நாளாக போலீசார் அதிரடி சோதனை 452 கிலோ குட்கா போதை பொருட்கள் மற்றும் 2 வாகனங்கள் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் தொடர்ந்து 2-ஆவது ரைடு நடத்தப்பட்டது. காவல் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad