• சற்று முன்

    வேலூரில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட நடிகர் பொன்னம்பலம் கோப்பைகள் சான்றுகளை வழங்கினார்

    வேலூரில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டிகள் சுமார் 600-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட நடிகர் பொன்னம்பலம் கோப்பைகள் சான்றுகளை வழங்கினார் 

    பள்ளிகளில் கட்ட பழக்கங்கள் அதிகமாகி வருகிறது அதைப் போன்று இல்லாமல் நீங்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் எந்த தீய பழக்கங்களுக்கும் ஆளாக கூடாது உங்களைப் பார்த்து மற்றவர்களும் மாற வேண்டும் அதைப்போன்று முன்னோடியாக வாழ வேண்டும் என நடிகர் பொன்னம்பலம் பேசினார்.வேலூர் பாகாயத்தில் ஜப்பான் ஷிட்டோ ரியூ கராத்தே  பள்ளியின் சார்பில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது இதனை இந்திய தலைமை கராத்தே பயிற்சியாளர் ரமேஷ் தலைமை தாங்கி துவங்கி வைத்தார் இதில் கராத்தே மாஸ்டர்கள் லச்சு ,விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் 


    இதில் பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் 600-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள் இதில் கட்டா சண்டை போட்டிகள் ,சுருள் வால் தனித்திறமை உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டன இதில் வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட நடிகர் பொன்னம்பலம் பரிசுகள் கோப்பைகள் சான்றுகளை வழங்கினார்.

    இவ்விழாவில் பெற்றோர்களும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்   மேலும் ஓடுகள் உடைத்தல் தற்காப்பு சண்டை போன்ற சாகங்களையும் கராத்தே வீரர்கள் செய்து காட்டினார்கள் இவ்விழாவில் நடிகர் பொன்னம்பலம் பேசுகையில் மாணவர்கள் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். தாய் தகப்பனை வணங்க வேண்டும் வீணாக யாரிடமும் சண்டை போடக்கூடாது தற்காப்புக்களுக்கு மட்டுமே உபயோக வேண்டும்.    இந்த காலத்தில் சில பள்ளிகளில் கட்ட பழக்கங்கள் அதிகமாகி வருகிறது அதைப் போன்று இல்லாமல் நீங்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டுமென எந்த தீய பழக்கங்களுக்கும் ஆளாக கூடாது உங்களைப் பார்த்து மற்றவர்களும் மாற வேண்டும் அதைப்போன்று முன்னோடியாக வாழ வேண்டும் என பேசினார்.

    செய்தியாளர் : பிரேம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad