• சற்று முன்

    தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான சைக்கிளிங் போட்டி

    இராணிப்பேட்டை அடுத்த அக்ராவரத்தில் நேற்று மற்றும் இன்று என  2 நாட்கள் நடைபெற்றது. மாநில அளவில் நடைபெற்ற இந்த போட்டி நிகழ்ச்சிகளுக்கு  தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் மாநில துணைத்தலைவர், கழக சுற்றுச்சூழல் அணி மாநிலத்
    துணைச் செயலாளர் ஆர். வினோத்காந்தி  தலைமை தாங்கினார். மாநில தலைவர் சுதாகர் முன்னிலை வகித்தார். இந்த போட்டியில் சென்னை, அரியலூர், கோவை, ஈரோடு, மதுரை, தென்காசி, தஞ்சாவூர், திருச்சி உள்பட 23 மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 250 சைக்கிளிங் வீரர்கள்  கலந்து கொண்டு போட்டியிட்டனர். இதில் 14 ,16 ,18, 23 ஆகிய வயது பிரிவுகளில்  சைக்கிளிங் போட்டி நடைபெற்றது. அதிக பட்சமாக பெண்கள் பிரிவில் 43 வயதுடைய பெண் ஒருவர் கலந்து கொண்டார். சைக்கிளிங் வீரர்கள் வயது பிரிவு ஏற்றவாறு 8 கி.மீ.முதல் 40 கி.மீ வரை‌ சைக்கிளிங் போட்டி நடைபெற்றது‌.


    போட்டியில் வெற்றி பெற்று  முதல் மூன்று இடங்களை பிடித்த  வீரர்களுக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை‌ ஆர். காந்தி அவர்கள்  மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில்  ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் சேர்மன் மாணிக்கம், மாநில செயலாளர் விக்னேஷ்,  மாநில பொருளாளர் பழனி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன், வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட், துணை தலைவர் இராதாகிருஷ்ணன், வாலாஜா மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏ.கே.முருகன், நகர கழக செயலாளர் பூங்காவனம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத்Mc, ரேன்சி சைக்கிள் உறுப்பினர்கள் சந்தோஷ்காந்தி, சிவா, பிரமோத்குமார், விவேக், பாலாஜி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வேதா சீனிவாசன்,துணை அமைப்பாளர் ஜெனீஷ், தகவல் தொழில்நுட்ப அணி ராம்கி,  யுவராஜ்,மனோ, கிரி, பிரித்தம், மற்றும் அரக்கோணம் சுற்றுசூழல் அணி ஜான் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.


    செய்தியாளர் : R.J .சுரேஷ் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad