• சற்று முன்

    கோவில்பட்டியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.

    குழந்தை இல்லை என கணவரும் கணவரின் குடும்பத்தாரும் கொடுமைப்படுத்தியதாக பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டு. கொடுமை படுத்திய அனைவரையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் சாலை மறியல். 

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் தங்கம் தம்பதியரின் மகன் ராகுல் (30) இவர் நெல்லை (RMS) ரெய்ல்வே மெயில் சர்வீசில் பணிபுரிந்து வருகிறார் இவருக்கு சிவகிரி சங்குபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கச்சாமி வள்ளித்தாய் ஆகியோரின் மகள் காயத்ரி (26) கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். ராகுலும் காயத்ரியும் கடந்த மூன்று வருடங்களாக தெற்கு திட்டங்குளத்திலேயே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காயத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரின் குடும்பத்தாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். விரைந்து வந்த காயத்ரியின் குடும்பத்தார்கள் கிழக்கு காவல் நிலையத்தில் காயத்ரியின் தாயார் வள்ளித்தாய் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக புகார் வழங்கியுள்ளார் மேலும் காயத்ரியின் சகோதரர் குமார் செய்தியாளர்களிடம் கூறும் போது எனது சகோதரியின் கணவருக்கு குடி மற்றும் கஞ்சா பழக்கம் இருந்து வந்துள்ளதாகவும் காயத்ரிக்கு மூன்று வருட காலமாக குழந்தை பேரு இல்லாததால் அதனைக் கூறி  அவரிடம் தினசரி கணவன் ராகுல் அவரது அம்மா தங்கம் அவரது அக்கா அஜிதா மற்றும் அவரது  கணவர் பிள்ளையார் ஆகியோர் செல்போனிலும் நேரிலும் தகாத வார்த்தைகளால் வசை பாடி வந்ததாக காயத்ரி போன் மூலமாக அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று காயத்திரியின் சகோதரனுக்கு நெல்லை மருத்துவமனையில் குழந்தை பிறந்த தகவலை ராகுலுக்கு தெரிவித்து இருந்த நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு காயத்ரி மெசேஜ் மூலம் தனது சகோதரருக்கு தெரியப்படுத்தி உள்ளார் இந்நிலையில் ராகுல் நெல்லை ஆர்.எம்.எஸ்.க்கு இரவு பணிக்கு சென்று விட்டு காலை 6:00 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில்

    நேற்று இரவு பணிக்குச் சென்ற ராகுலை காலை 4 மணிக்கே அப்பகுதி மக்கள் பார்த்ததாக தகவல் தெரித்தது எங்களுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் இதனை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து ராகுல் அவரது தாயார் தங்கம் அக்கா அஜிதா மற்றும் அவரின் கணவர் பிள்ளையார் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என புகார் தெரிவித்திருந்த நிலையில் காவல்துறையினர் ராகுலை மட்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதனால் மற்ற மூவரையும் கைது செய்யக்கோரி காயத்ரியின் குடும்பத்தார்கள் அரசு மருத்துவமணை சாலையில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு சாலை மறியலை கைவிட்டனர் இதனால் புது ரோடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது. மேலும் 4 நபர்களையும் கைது செய்யும் வரை காயத்ரியின் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத அரை முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

    செய்தியாளர் : சிவராமலிங்கம் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad