• சற்று முன்

    காட்பாடி பொன்னையில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் திறப்பு விழா!! அமைச்சர்கள் துரைமுருகன், வேலு மற்றும் காந்தி பங்கேற்பு!!

    வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பொன்னை ஊராட்சி, பொன்னை ஆற்றின் குறுக்கே சித்தூர், திருத்தணி, வேலூர் நெடுஞ்சாலையில் ரூ.35 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய உயர்மட்ட பாலத்தை காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும்,  நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலையில் திறந்து திறந்து வைத்து சிறப்புரையாற்றினர். 

    இந்நிகழ்ச்சியில் அரசு செயலாளர், நெடுஞ்சாலை (ம) சிறு துறைமுகங்கள் துறை மரு.இரா.செல்வராஜ், வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, பாராளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், அமுலுவிஜயன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ஏ.எம். முனிரத்தினம், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பாபு. மாநகராட்சி மேயர், துணை மேயர் மா.சுனில்குமார், காட்பாடி ஒன்றியக் குழுத்தலைவர், 1வது மண்டலக் குழுத்தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, காட்பாடி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் சரவணன், நெடுஞ்சாலைத்துறை க(ம) ப கண்காணிப்பு பொறியாளர் முனைவர் ஆர். கிருஷ்ணசாமி, கோட்டப் பொறியாளர் தனசேகரன், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad